வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (09/11/2015)

கடைசி தொடர்பு:14:54 (09/11/2015)

சிவகார்த்திகேயன் படம் வெளிப்படுத்தும் மெட்ரோரயில் ரகசியம்

 கடந்த ஜூன் இறுதியில் சென்னை மெட்ரோரயில் ஓட்டம் தொடங்கியது. அது தொடங்கியவுடனே பலரும், இனிமேல் தினமும் ஒரு படப்பிடிப்பு நடக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய பாக்யராஜ்கண்ணன் இயக்கும் சிவகார்த்திகேயனின் புதியபடத்தின் படப்பிடிப்பு அண்மையில் அங்கு நடந்திருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இடம்பெறுகிற பாடலின் ஒரு பகுதியை அங்கு படம்பிடித்தாகச் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் மற்றும் நடனக்கலைஞர்கள் பங்கேற்ற அந்தப்பாடலுக்கான நடனத்தை ராஜூசுந்தரம் அமைத்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவர்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தபின்புதான் இவ்வளவு நாட்களில் வேறு யாரும் அந்தப்பக்கம் போகாததன் காரணம் தெரிகிறது.

அங்கு படப்பிடிப்பு நடத்த ஒரு மணிநேரத்துக்கு நான்குஇலட்சம் ரூபாய் வாடகையாம். ஒருநாள் படப்பிடிப்பு நடத்தினால், திரையுலகின் மொழியில் ஒரு கால்ஷீட் படப்பிடிப்பு நடத்தவேண்டுமென்றாலே சுமார் நாற்பதுஇலட்சம் செலவாகிவிடும். எனவேதான் அங்கு யாரும் படப்பிடிப்பு நடத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.     

 
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க