சினி நொறுக்ஸ்

"நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன், நாளை முதல் படப்பிடிப்பு செல்ல இருக்கிறேன். ரெகுலராக என் டிவிட்டுகளை எதிர்பார்க்கலாம்" என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

"டுத்த வாரம் துரை.செந்தில்குமாரின் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படத்திற்காக பொள்ளாச்சி செல்கிறேன். பிரேமம் தமிழ் ரீமேக் நான் தயாரிக்க, விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக வெளியானது தவறான தகவல்.அந்த படத்தின் உரிமையே என்னிடமில்லை" என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி அன்று வெளியான வேதாளம் மற்றும் தூங்காவனம் ஆகிய படங்களின் ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸ் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. வேதாளம் 15.50 கோடியும், தூங்காவனம் 10.7 கோடியும் வசூல் அள்ளியுள்ளன.

வேதாளம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தன் படத்தை இயக்க 'சிறுத்தை' சிவாவிற்கு வாய்ப்பளித்துள்ளார் அஜித். 2016 ஜூன் மாதம் இந்த படத்தின் சூட்டிங் தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!