"அஜித் எப்போதுமே கெத்துதான்" - வேதாளம் படம் சொல்லும் 6 உண்மைகள்..!

வேதாளம் படம் வெளியாகி ஹிட்டடித்து வருகிறது. இந்நிலையில் அஜித் ஏன் கெத்து  என்பதற்கு இதோ  6 காரணங்கள்

1) மழை, வெயில், புயல் என எதுவாக இருந்தாலும் அஜித் மாதிரியான ஒரு சூப்பர் ஹீரோவின் படத்தை பாதிப்பதில்லை இதுதான் 'வேதாளம்' இந்த புயலிலும் வெற்றி பெற்று, சொல்லியுள்ள பாடம்

2) அஜித் படத்துக்கு ஹீரோயின் தேவையில்லை. ‘வேதாளம்’ படத்தில் கதாநாயகி ஸ்ருதி இருப்பதும் ஒன்றுதான்... இல்லாததும் ஒன்றுதான் என்கிற அளவிற்கு அவர் குறித்து எந்த பேச்சுமே எழவில்லை.

3) எதிர்பார்த்தபடி ஆக்‌ஷன் படம் இல்லை, எப்போதும் பார்த்த அதே தங்கச்சி செண்டிமெண்ட் தான் என்றாலும் படம் அஜித் என்ற ஒரு மனிதனுக்காக ஓப்பன் பாக்ஸ் ஆபிஸில் கமல் படத்தையே முந்தி வசூலில் கம்பீரமாக நிற்கிறது.

4) எவ்வளவு தான் நடிப்பைக் கொட்டி நடித்தாலும் சம்மந்தப்பட்ட கேரக்டர் அஜித்தை சுற்றி இருந்தால் மட்டுமே படத்தில் எடுபடும் என்பதற்கு லட்சுமி மேனன்,தம்பி ராமைய்யா, ரத்னா எடுத்துக்காட்டு.. எடுபடாததற்கு எ.கா: ஸ்ருதி ஹாசன், அஸ்வின், ஸ்ருதியின் அப்பா அம்மா.

5) படத்திற்கு புரமோஷன் ஆடியோ லான்ச், முக்கியமாக டிரெய்லர் கூட வெளியாகாமல் ரிலீஸ் செய்யும் தைரியம் கண்டிப்பாக அஜித் படங்களுக்கு மட்டுமே உண்டு என நிரூபித்துள்ளது வேதாளம்.

6) வந்தப் படம், வரப்போற படம் என எல்லா டிவிக்களிலும் தீபாவளி சிறப்பாக அவரவர் படத்தை பற்றிப் பேசிவந்த நிலையில் வேதாளம் குறித்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது திரைக் கண்ணோட்டமோ கூட நடத்தவில்லை.எனினும் அது அஜித் படத்துக்குத் தேவையில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது வேதாளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!