வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (13/11/2015)

கடைசி தொடர்பு:11:53 (13/11/2015)

விஜய்சேதுபதி காட்டில் மழை!

நானும் ரவுடிதான் பட வெற்றிக்குப் பிறகு விஜய்சேதுபதிக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ள நிலையில் இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்தப் படத்திலும் நாயகனாக நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் “இடம்பொருள்ஏவல்”. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தப் படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் சீனு ராமசாமி. இவரின்  அடுத்தப் படத்திலும் விஜய்சேதுபதியே நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

“தர்மதுரை” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுகுமார் கவனிக்க, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்யவிருக்கிறார். சலீம் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ 9 புரெடக்‌ஷன் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்தின் நாயகி பற்றியும் மற்ற கலைஞர்கள் பற்றியான விபரங்களும் விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள். மேலும் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி போலீஸாக நடிக்கும் “ சேதுபதி படமும், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “மெல்லிசை”, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “இறைவி”, நளன்குமாரசாமி இயக்கத்தில் “காதலும் கடந்துபோகும்” உள்ளிட்டப் படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க