இணைத்த உதயநிதி...விலக்கிய மனைவி!

உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பா சில மணி நேரங்களுக்கு முன்பு ட்விட்டரில் இணைந்து உடனடியாக அவரது அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுள்ளது. உதயநிதி தனது மகனின் ட்விட்டர் அக்கவுண்டை ஆரம்பித்து யார் ட்விட்டரில் இணைந்துள்ளார் பாருங்கள் நண்பர்களே என ட்வீட் செய்தார்.

பலரும் இன்பாவிற்கு வருக என ட்வீட் போட ட்விட்டரில் இன்பாவின் அக்கவுண்ட் சில நிமிடங்களில் பிரபலமானது. மேலும் இன்பா கால்பந்து பிரியர் என்பதும் பின்தொடர்ந்த ட்விட்டாளர்களுக்கு தெரியவர படபடவென ரசிகர்கள் இன்பாவிடம் பேச முயன்றனர்.

 

இந்நிலையில் சிலர் உதயநிதியை டேக் செய்து இன்பாவிற்கு 13 வயதுதானே ஆகிறது அவர் எப்படி ட்விட்டரில் இணையலாம் எனக் கேட்க ஆரம்பிக்கவே சிறிது நேரத்தில் அக்கவுண்ட் அழிக்கப்பட்டு அதற்கு உதயநிதி பதில் சொல்லியிருக்கிறார். அதில் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி, ட்விட்டரை பயன்படுத்த இன்பா மிகவும் சின்ன வயது எனக் கூறியதால் அதை வழிமொழிந்து அழித்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!