நடிகர் நகுலுக்கு திடீர் திருமணம்

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பி. 2003 ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படம் எல்லோருடைய கவனத்தைப் பெற்றாலும் படம் ஓடாததால் நகுலுக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

‘பாய்ஸ்’ படத்தை தொடர்ந்து நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ 2008 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் , ‘மாசிலாமணி’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இப்போது, அமளிதுமளி உட்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நகுலுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அவருக்கும் ஸ்ருதி பாஸ்கர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை நிச்சயித்துள்ளனர்.

இந்தச் செய்தியை நகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அவருடைய திருமண அறிவிப்பு வந்திருப்பது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!