Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுட்டிக்குழந்தை முதல் காக்காமுட்டை வரை - தேசியவிருதுக் குழந்தைகள் சிறப்புக்கட்டுரை

றியா வயது, சொல்வதைப் புரிந்து நடிப்பை வெளிப்படுத்துவதே சவாலான காரியம். இதில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றால் கண்டிப்பாக அவர்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தானே. இதோ இதுவரை தமிழில் தேசியவிருது பெற்ற குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஒரு சிறப்புத்தொகுப்பு. 

 பேபி ராணி- இவர் தான் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற முதல் இந்திய சினிமா குழந்தை. குழந்தைக்காக என்னும் படத்திற்காக 1967ல் வாங்கினார். ஹாலிவுட்டின் பேபி’ஸ் டே அவுட் படத்தைப் பார்த்து நம்மூர் சுட்டிக்குழந்தையை காப்பி செய்தார்கள் என் நாம் நினைத்தால் அது தவறு. பேபி’ஸ் டே அவுட்டின் ஒரிஜினல் வெர்ஷன் இதுதான். மூன்று திருடர்களால் கடத்தப்படும் குழந்தை, அந்தக் குழந்தைக்காக இவர்கள் நல்லவர்களாக எப்படி மாறுகிறார்கள் என்பதே மீதிக்கதை. மொத்தக் கதையின் கருவும் பேபி ராணி என்பதை மிக அழகாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.


ஷாம்லி: மீண்டும் சிறந்த குழந்தைக்கான தேசிய விருது கிடைக்க சுமார் 23 வருடங்கள் ஆகின. 1991ல் வெளியான மணிரத்னத்தின் அஞ்சலி படம் தான் அதை நிறைவேற்றியது. வெறும் மூணு வயதுக்குழந்தை இப்படி நடிக்க முடியுமா என இந்தியாவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம். படம் முழுக்க குழந்தைகள் தான் என்றாலும் 3 வயதில் தேசிய விருது பெற்ற குழந்தை ஷாம்லி தான். பயம், சோகம், அடம்பிடிப்பது, அழுவது இப்படி சீனுக்கு சீன் அசத்தல் நடிப்பைக் கொட்டியிருப்பார்.


ஸ்வேதா - 1998ம் ஆண்டு மல்லி படத்திற்காக விருது பெற்றார். 10 வயது ஸ்வேதா,தனது குடும்ப ஏழ்மை காரணமாக பணம் சம்பாதிக்க குச்சிகளைப் பொறுக்கி விற்கும் ஒரு சிறுமி வாயிலாக காடு, விலங்குகள், இயற்கையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய படம். ஸ்வேதாவின் அருமையான நடிப்பும், எதார்த்தமான நடவடிக்கைகளும் அவரது கேரக்டருக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்தது.


உதயராஜ் - இப்போது, இந்தச் சிறுவன் படங்களில் ஹீரோக்களுக்கு நண்பராக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர், 2001ல் வெளியான நிலாக்காலம் படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர். பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள். அவர்களுக்குத் தோழியாக ஒரு பிரபல நடிகையின் மகள் என இவர்கள் மூவரின் ஒரு நாள் பிக்னிக் தான் படம். குழந்தைகளின் அறியாமை, அவர்களீன் சின்னச் சின்ன சந்தோஷம் என மூன்று குழந்தைகளும் அவ்வளவு அழகான நடிப்பு. எனினும் உதயராஜின் நடிப்பு, காண்போர் மனதை உருக்கும்.ஸ்வேதா: மல்லி படத்துக்காக விருது வாங்கிய ஸ்வேதாவே மீண்டும் 2001ல் வெளியான குட்டி படத்திற்காகவும் விருது வாங்கினார். ஒரு பணக்கார குடும்பத்தில் குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்யும் பெண். அவள் அனுபவிக்கும் கொடுமைகள் என படம் முழுக்க ஸ்வேதாவின் நடிப்பு கண்டிப்பாக காண்போரை உருக்கி விடும். இரண்டு முறை தேசியவிருது பெற்ற குழந்தை ஸ்வேதாவாகத்தான் இருப்பார்.கீர்த்தனா : நடிகர், இயக்குநர் பார்த்திபனின் மகள். 2002ல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக தேசிய விருது. இலங்கை தம்பதியருக்கு மகள், தமிழ் தம்பதியருக்கு வளர்ப்பு மகள். அம்மாவை பார்க்க நினைக்கும் கீர்த்தனா செய்யும் ரகளைகளும், ஏக்கமும், அன்பின் வெளிப்பாடும் என படம் முழுக்க முழுக்க கீர்த்தனா. படத்தில் நடித்த மற்ற முக்கிய நடிகர்களைக் கூட மறக்கடித்திருப்பார்.


 கிஷோர் , ஸ்ரீராம்: 2009ம் ஆண்டு வெளியான பசங்க படம். மொத்தப் படமும் ஸ்லாகிக்க வேண்டிய படம் தான். குழந்தைகள் அவர்களின் மன நிலை. அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் என படம் பார்க்கும் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவிட்ட படம். அதில் இரண்டு ஹீரோக்கள் கிஷோரும், ஸ்ரீராமும் தான் படத்தின் தூண்கள். அருமையாக நடித்திருப்பார்கள்.சாதனா: 2013ல்  தங்க மீன்கள் படத்துக்காக சாதனாவுக்கு விருது கிடைத்தது. ஒரு மத்தியதரவர்க்க அப்பா மகள்  இருவருக்குமான பாசப் போராட்டம் தான் படம். படிப்பு வரவில்லை, ஒரு திறமையும் இல்லை என திட்டும் ஆசிரியர்கள், நினைத்தது கிடைக்கவில்லை, வீட்டின் ஏழ்மை என ஒன்று சேர்ந்து சாதனாவை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்பதே படத்தின் கரு. அப்பாவிடம் உருகிஉருகிப் பேசுவதும், ஸ்கூலில் அதிகப்பிரசங்கித் தனமாக நடப்பதும் என சாதனா நடிப்பில் அப்ளாஸ் அள்ளிய படம்.


 விக்னேஷ், ரமேஷ்: 2014ல் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த காக்கா முட்டைகள். ஒரு பீட்சாவுக்காக போராடும் இரு குழந்தைகளின் வாழ்க்கையை எதார்த்தமாக, எளிமையாக, உருக்கமாகச் சொன்ன படம். சமுதாயத்தின் மேல்தட்டு மக்களை சற்றே அசைத்துப்பார்த்த படம் எனவும் சொல்லலாம். இதில் பீட்சா சாப்பிட இரு குழந்தைகளும் செய்யும் முயற்சிகளும், சொதப்பல்களும் என நடிப்பில் அசத்திகாண்போரை சிந்திக்க வைத்தனர் இந்த இரு சிறுவர்களும். 

 இதில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா(1959) படத்தில் இந்தியாவின் பிரசிடெண்ட் ஆஃப் கோல்ட் மெடல் வாங்கி இந்தக் குழந்தைகள் பயணத்திற்கு முதல்முதலில் வேறு விதமாக அடித்தளம் அமைத்தவர் கமல்ஹாசனே.

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...

- ஷாலினி நியூட்டன் -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்