ஜி.வி.பிரகாஷ் பட இயக்குநர் பெயரை சொல்லாதது ஏன்?

டார்லிங், த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் புருஸ்லீ. பிரசாந்த்பாண்டியராஜ் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து வாசுவும்சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க படஇயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

அந்தப்படத்தை வேந்தர்மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தைத் தொடர்ந்து கத்தி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் கதாநாயகன் தவிர மற்ற விசயங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தை ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் முதலில் வெளியான டார்லிங் படத்தை இயக்கிய சாம்ஆண்டன் இயக்கப்போகிறாராம்.

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தக்கூட்டணி மீண்டும் இணைந்து படம் செய்யும் வழக்கப்படி இந்தக்கூட்டணி இணையும் பேச்சுகள் பல வாரங்களாகவே நடந்துவந்ததென்று சொல்லப்பட்டது. சரியான தயாரிப்பாளர் அமைந்ததும் அதுபற்றிச் சொல்லலாம் என்று இருந்தார்களாம். லைகா நிறுவனம் இந்தக்கூட்டணியை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்துவிட்டது. ரஜினியை வைத்து எந்திரன்2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற பிறகும் இயக்குநர் பெயரைச் சொல்லாதது ஏன் என்கிற கேள்வி உலவிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் மாற்றம் இருக்குமா? அல்லது மற்ற தொழில்நுட்பக்கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்துவிட்டுச் சொல்லலாம் என்று இருக்கிறார்களோ தெரியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!