Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த உத்தமவில்லன்!

கமல், ஊர்வசி, பூஜாகுமார், பார்வதி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் உத்தமவில்லன். ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்தை கமலுடன் இணைந்து லிங்குசாமி தயாரித்திருந்தார்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நடித்திருந்த இப்படம், லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (LAIFFA) திரையிடப்பட்டது. அதுமட்டுமின்றி ஐந்து விருதுகளையும் வாங்கி குவித்துள்ளது. 

சிறந்த படம் - உத்தமவில்லன்,  சிறந்த நடிகர் - கமல்ஹாசன், சிறந்த இசை - ஜிப்ரான், சிறந்த பாடல் - ஜிப்ரான், சிறந்த ஒலி வடிவமைப்பு - குனல் ராஜன்.

அதுமட்டுமின்றி ரஷ்யன் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதினையும் பெற்றுள்ளது. உத்தமவில்லன் திரைப்படத்திற்குக் கிடைத்த வெற்றி, படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்