ஆர்யாவுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம்?

கே.எஸ்.பிரகாஷ் ராவோ இயக்கத்தில் அனுஷ்கா, ஆர்யா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. சைஸ் ஸீரோ மோகமும், குண்டான தேகமும் என படம் தற்போதைய ட்ரெண்ட் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஏற்கனவே ஜீவா, ஹன்சிகா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்கள் என தகவல்கள் கசிந்தன.

இப்போது புதிய செய்தியாக நாகார்ஜுனா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி என இவர்களும் சிறப்புத் தோற்றத்தில் வரவிருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்யாவின் பெங்களூர் டேய்ஸ் பட டீமான பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா என்பதால் அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டது ஆச்சர்யம் இல்லை. அதேபோல் தமன்னா, காஜல் டிரெய்லர், மற்றும் கதை என பிடித்துவிட்டதால் எந்தவித காரணமும் சொல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளனராம்.

 

படத்தில் இயற்கையான அழகு குறித்து பேசப்படுவதால் ரேவதிக்கு பிடித்துவிட அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். இந்நிலையில் ஒரே படத்தில் இத்தனை சிறப்புத் தோற்றங்களா என சினிமா உலகினர் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

இப்படித்தான் எந்த நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகொள்ளாத நயன்தாரா ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டில் நயன் , த்ரிஷா என பல நடிகைகள் கலந்துகொண்டனர். இதிலிருந்தே ஆர்யாவின் நட்பு வட்டாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது நமக்கு கண்கூடாகத் தெரிகிறது.மேலும் வெங்கட் பிரபு படங்களில் மட்டுமே இது அவ்வப்போது சாத்தியம் எனினும் பெரிய ஹீரோக்கள் வருவது மிகவும் அபூர்வமே. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!