அஜித்தின் அடுத்தபடம் எப்போது?

வீரம் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, தம்பி ராமையா, ரத்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி சிறப்பாக வெளியான படம் வேதாளம். படத்திற்கு இசை அனிருத். படம் வெளியானது முதல் மழை, புயலிலும் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வேதாளம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் போது காலில் அஜித்துக்கு அடிப்பட்டது.

காலில் காயங்களுடனேயே படத்தை முடித்த அஜித்துக்கு அதற்கான அறுவை சிகிச்சை குமரன் மருத்துவமனையில் கடந்த வியாழன் அன்று இரவு 7.30 மணிக்குத் துவங்கி வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு முடிந்தது. அறுவை சிகிச்சை செய்தார் மருத்துவர் டேவிட் ராஜன். அறுவை சிகிச்சை நடந்துமுடிந்துள்ள நிலையில் அஜித் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு ஜூன் 2016க்குப் பிறகே எனக் கூறப்படுகிறது. இதனால் அந்தப்படம் 2016 இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ல் பிப்ரவரியில் என்னை அறிந்தால் , நவம்பரில் வேதாளம் என இரு படங்கள் கொடுத்த அஜித் அடுத்த வருடம் அது சாத்தியமா எனக் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனினும் படத்தைக் காட்டிலும் அஜித் நலம் என்ற செய்தியே தற்போது ரசிகர்களின் சந்தோஷச் செய்தியென்றால் மிகையாகாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!