தனிஒருவன் வெற்றியைத் தக்கவைப்பாரா ஜெயம்ரவி?

தனிஒருவன் பட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் மிருதன். பொங்கலுக்கு பல படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இப்படமும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிவரும் படம் மிருதன். இப்படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயம்ரவி - லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே.

மிருதன் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலையை எட்டியுள்ளதாம்.  அடுத்த வாரம் படத்திற்கான க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் புகைபிடிப்பதுபோன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம்பெறவில்லை என்று சொல்லுகிறார்கள். மேலும் தமிழில் வெளியாகும் முதல் சோம்பிக்கள் (சோம்பிக்கள் என்பவர்கள், கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் யாரையாவது கடித்தால் கடிபட்டவரும் சோம்பி ஆகிவிடுவார். அறுபதுகளில் இதுபோன்ற கதைகள் அமெரிக்காவில் எழுதப்பட்டது) சார்ந்த கதை என்றும் கூறப்படுகிறது.  இப்படத்திற்கு இசை டி.இமான்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்துவரும் இப்படத்திற்கான தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றிருக்கிறது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

முன்னதாக பாலாவின் தாரைதப்பட்டை, பாண்டிராஜின் இதுநம்மஆளு, விஷால் நடிக்கும் கதகளி, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இப்படமும் பொங்கல் ரேஸில் களம் இறங்குகிறது. தனிஒருவன் வெற்றியை இப்படத்திலும் ஜெயம்ரவி தக்கவைப்பாரா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!