ரோமில் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா!

தன் அழகாலும், நடிப்பாலும் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்குப் பிறந்தநாள் இன்று. இந்நிலையில் நயன்தாரா பிறந்தநாளை #HBDLadySuperstarNayanthara என ட்ரெண்டை உருவாக்கி கொண்டாடிவருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில் நயன்தாரா தனது பிறந்தநாளை ரோம் வாடிகன் சிட்டியில் கொண்டாடி வருகிறார். மேலும் ஞாயிறு ரோமின் மிகப்பெரிய சர்ச்சில் போப் ஆசீர்வாதம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தோடு சந்தோஷமாக கோவிலுக்குச் செல்வதே திட்டம் என நயன்தாராவின் சகோதரரும் தெரிவித்துள்ளார்.

 

சொந்த விஷயங்கள் குறித்து அதிகம் பேச விரும்பாத நயன்தாரா இதனாலேயே சமூக வலைகளிலும் கலந்துகொள்வதே இல்லை. நயன்தாராவின் பிறந்தநாள் தேசிய ட்ரெண்ட் ஆகியுள்ள விஷயத்தை நாம் தெரிவிக்கையில் ஆச்சர்யத்தில் வியக்கிறார் நயன்தாராவின் சகோதரர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!