வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (18/11/2015)

கடைசி தொடர்பு:13:25 (18/11/2015)

விஜய்சேதுபதியின் போங்கு?

ரௌத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய்பாலகுமாரா ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்தி, நயன்தாரா நடிக்கும் கஷ்மோரா படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் கோகுல். அந்தப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்பட உருவாக்கத்துக்கு நிறைய காலம் தேவைப்படுவதால் படத்தின் நாயகன் கார்த்தி நாயகி நயன்தாரா உட்பட எல்லோரும் அதற்கு நடுவே வெவ்வேறு படங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் கோகுல் மட்டும் இந்தப்பட வேலைகளில் இருந்தார். அவரும் இப்போது இன்னொரு படவேலைகளில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு கதையைத் தயார் செய்துவிட்டாராம்.

அந்தக்கதையை விஜய்சேதுபதியிடம் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அவருக்குக் கதை பிடித்திருப்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்துக்கு போங்கு என்று பெயரும் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கதை, கதாநாயகன் மற்றும் பெயர் ஆகியன தயாராகிவிட்டாலும் படம் எப்போது தொடங்குவது என்பது பற்றி அவர்களே இன்னும் முடிவுக்கு வரவில்லையாம். விஜய்சேதுபதிக்கு வரிசையாகப் படங்கள் இருக்கின்றன, இவருக்கு கஷ்மோரா இருக்கிறது. இவற்றுக்கு நடுவே இந்தப்படத்தின் வேலைகளும் நடக்கும், ஒரு சுபயோக சுபதினத்தில் இதுபற்றிய அறிவிப்பு வருமென்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க