பானுமதிக்கும் நயன்தாராவுக்கும் என்னென்ன ஒற்றுமைகள்?

லேடி சூப்பர் ஸ்டார், அதிக சம்பளம் வாங்கும் நடிகை இப்படிச் சொன்னாலே பட்டென நியாபகம் வந்துவிடுவார் நயன்தாரா. ஆனால், இதை கண்டிப்பாக நம் வீட்டு தாத்தா பாட்டியிடம் சொன்னால் என்ன நயன்தாரா பானுமதி கிட்ட நெருங்க முடியுமா என்பார்கள். உண்மையும் அதுவே. ஏனென்றால், பானுமதியின் சில ஒற்றுமைகள் நயன்தாராவிடமும் இருக்கிறது. அது என்ன?

  1.திருமணத்துக்குப் பிறகு கணவர் பேச்சையும் மீறி நடிப்பில் புது இலக்கணம் எழுதி, எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்தவர் பானுமதி. எனில் நயன்தாரா வாழ்வில் ஏற்பட்ட சொந்தப் பிரச்னைகளுக்கு அளவே இல்லை. அதையெல்லாம் கடந்து ஒரு நடிகையாக இப்போது இருக்கும் டாப் நடிகர்களான விஜய், அஜித்துக்கே டஃப் கொடுக்கிறார்.

  2. தான் நடிக்கும் படத்தில் தான் மட்டுமே பாட வேண்டும், சொந்தக் குரலில் மட்டுமே பேசியவர் பானுமதி. இப்போது அப்படியான முயற்சிகளில் ஈடுபடுகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். விரைவில் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

  3. எம்.ஜி.ஆர் , சிவாஜியுடன் நடிக்கக் கூட பல கண்டிஷன்கள், போட்டவர் பானுமதி. தான் நடிக்கும் படத்தில் இப்போதெல்லாம் ஹீரோக்களே தேவையில்லை... கதையும், ஸ்க்ரிப்ட்டும் பலமாக இருந்தால் போதும் என பல பெரிய ஹீரோக்கள் படங்களை ஒப்புக்கொள்வதையே குறைத்துவிட்டார் நயன்தாரா.

  4. பானுமதியின் கால்ஷீட் கிடைத்தாலே போதுமென இருந்தார்கள் இயக்குநர்கள். இப்போது அந்த ஸ்டேட்டஸ் நயன்தாராவுக்கு மட்டுமே இருக்கிறது. நீ எங்கே என் அன்பே, மாயா படங்கள் அதற்கான உதாரணம்.

  5. காலைத்தொட மாட்டேன், கட்டிப்பிடித்து டூயட் ஆட மாட்டேன் என பானுமதிக்கு எப்படி தனக்குத்தானே சில கட்டுப்பாடுகள் உண்டோ, அதே பாணியில் நயனும் சொந்த மண்ணாகவே இருந்தாபோதும் எப்பேற்பட்ட ஹீரோவாக இருப்பினும் மலையாளத்தில் வருடத்துக்கு ஒரு படம், பரவலாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தன் பட புரமோஷன்களிலேயே தலை காட்டுவதில்லை என கட்டுப்பாடுகள் போட்டுக்கொண்டவர் நயன்தாரா.

  6. கிசுகிசுக்களைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே பானுமதி ஹீரோக்களுடன் அடுத்த படம் நடிப்பார். அப்படித்தான் நயன்தாரா இரண்டு படங்களுக்கு மேல் ஒரு நாயகனுடன் நடிக்க ஒரு கால இடைவெளி வைத்துள்ளார் எனலாம். ஆர்யா, உதயநிதியின் அடுத்தடுத்தப் படங்களின் நிராகரிப்புக்குக் காரணமும் அதுவே.

  7. தயாரிப்பு, இயக்கம், இசை என பானுமதிக்கு ஹீரோக்களுக்கு நிகரான ரசிகர்கள் இருந்தார்கள் என்றால், நயன்தாரா எனக்கான கூட்டத்தைப் பாருங்கள் என சேலத்தில் நகைக்கடைத்திறப்பு விழாவில் ஊரையே ஸ்தம்பிக்க வைத்தது நாமறிந்ததே. ரஜினி, கமல், விஜய், அஜித்துக்குப் பிறகு ட்விட்டரில் ஒரு ஹீரோயினுக்காக ட்ரெண்ட் உருவானது என்றால் அது நயன்தாராவுக்கு மட்டுமே.

  - ஷாலினி நியூட்டன் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!