அடித்த மழையில் காக்காமுட்டை படத்தில் வந்த இடங்களைக் காணோம்

காக்கா முட்டை படத்தில் வரும் கூவம் ஆற்றை ஒட்டிய சேரிப்பகுதி நீரில் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

 

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இரண்டு தேசியவிருதுகளையும் பல உலக திரைப்பட விருதுகளையும் குவித்த காக்கா முட்டை

படம் முழுக்க முழுக்க சைதாப்பேட்டையை ஒட்டிய கூவம் ஆற்றை ஒட்டிய சேரிப்பகுதியில் தான் முழுமையாக எடுக்கப்பட்டது.

கடந்த வாரம் பெய்த கனமழையில் கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் கூவம் ஆற்றை ஒட்டிய சேரிப்பகுதிகள் யாவும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. அதில் காக்கா முட்டை படமெடுக்கப்பட்ட இடமும் அடக்கம்.

இப்போது அங்கிருந்த மக்கள் யாவும் பாதுகாப்பாக அருகில் இருக்கும் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 காக்கா முட்டை படத்தின் வீடியோ பாடலுக்கு: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!