தப்பா எழுதாதீங்க - பொங்கிய ஸ்ருதிஹாசன்

கமல் மகள் என்கிற அடையாளத்தைத் தாண்டி விஜய், அஜித், சூர்யா ஆகியோரோடு நடித்து தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றிருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் சமுகவலைதளமான டிவிட்டரில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்.

தன்னுடைய கருத்துகளை எல்லாம் டிவிட்டரில் வெளிப்படுத்திவிடுவார். அங்கு அவருடைய அவருடைய பெயரை எல்லோரும் தப்புத்தப்பாக எழுதுகிறார்களாம். shriti ,Strudhi ,surudhi,shroothy,hassan or the sruthi Hussain என்றெல்லாம் எழுதுகிறார்களாம்.

நீண்டநாட்களாக இப்படி நடக்கிறதாம். அதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தாராம். அப்படி எழுதுவது அதிகமாகவே பொங்கிவிட்டார். டிவிட்டரிலேயே, என்னுடைய பெயரை எழுதும்போது SHRUTI HAASAN என்று மட்டும் எழுதுங்கள் வேறு எந்த எழுத்துகளையும் பயன்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஒருவேளை எண்கணிதம் பார்த்து இப்படிப் பெயர் வைத்திருக்கிறாரோ என்னவோ?   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!