சண்டைப்பயிற்சி இயக்குநருக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விஜய்

 பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் சுப்பராயனின் மகன்  திலிப் சுப்பராயனும் சண்டைப்பயிற்சி இயக்குநர். 2007 ஆம் ஆண்டு சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார்.

நிறையப் படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுவதோடு விமல் கதாநாயகனாக நடித்திருக்கும் அஞ்சல படத்தையும் தயாரித்திருக்கிறார். 

 அவரது தயாரிப்பில் உருவாகி, அடுத்த மாதம் திரைக்கு  வெளி வரத் தயாராக உள்ள 'அஞ்சல' படத்தின்  பாடல்தொகுப்பை  விஜய் வெளியிட்டு  இருக்கிறார்.
 
 'இடை விடாமல்  படப்பிடிப்பு  நடந்துக்  கொண்டிருந்ததால்  அவரிடம்  சி டி வெளி இட  முடியுமா என்று கேட்பதற்கு சற்றுத் தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சற்றும் தயங்காமல் உடனே வாங்க என்றுச் சொல்லி சி டி யை வெளியிட்டார். இந்தப் படத்தினால் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம் , அவற்றில் முக்கியமானது அவர் என்னிடம் அன்று கூறிய  ஊக்க வார்த்தைகள்.   அந்த வார்த்தைகள்  திரை யுலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றி  பெறவும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும்' என்று  நம்பிக்கையுடன் கூறினார் திலிப் சுப்பராயன். 
 
இவர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!