தமிழ் நடிகரை மாசிடோனியாவிற்குள் அனுமதிக்க மறுப்பு!

ஈழத்தமிழ் எழுத்தாளரும், நடிகருமான ஷோபா சக்தி (எ) அந்தோணிதாசனை மாசிடோனியா நாட்டிற்குள் அனுமதிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மாசிடோனியாவில் ஸ்கோஜெ நகரில் சினிடேய்ஸ் உலகத்திரைப்பட விழா நடந்து வருகிறது.

சோபாஷக்தி நடித்து, பிரபல ப்ரெஞ்ச் இயக்குநர் சாக் ஆடியார் இயக்கத்தில் வெளியான 'தீபன்' என்கிற ப்ரெஞ்ச் படம் கேன்ஸ் திரைப்படவிழாவின் உயரிய விருதான 'தங்கப்பனை' விருதினை வென்றது.இதை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களில்  விருதுகளை வென்று வருகிறது. 

நேற்று ஸ்கோஜே நகர விமான நிலையத்தியில் வந்திறங்கிய ஷோபா சக்தியிடம் விசா இல்லை என நாட்டிற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.  25 ஆண்டுகளாக பிரான்ஸில் வசித்தாலும் இன்னும் ஷோபா சக்தி அகதிகளுக்கான பாஸ்போர்ட் மட்டுமே வைத்திருக்கிறார்.

மாசிடோனியோ நாட்டு சட்டபடி பிரான்ஸ் தேச குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விசா இன்றி வரமுடியும். அதனால் ஷோபாசக்தி திருப்பி அனுப்பப்பட்டார். அதே நேரம் அதில் நடித்த தமிழ் நாட்டு நடிகையான காளீஸ்வரி கலந்து கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!