ரஜினி படத்தில் ராக்ஸ்டார்

  ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்துவருகிறது. தினந்தோறும் அதுபற்றிய செய்திகளும் புகைப்படங்களும் இணையதளங்கள் மற்றும் சமுகவலைதளங்களில் வலம் வரத்தொடங்கின.

அதனால், பயந்துபோன படக்குழுவினர், தொடர்ந்து புகைப்படங்களைப் பகிரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த பிறகு ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. ஆனாலும் சிங்கப்பூர் மலேசியாவில் உள்ளவர்கள் கிடைக்கிற படங்களைப் பகிர்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

அந்தப்படத்தில் நடிக்கும் தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் நடிக்கும் செய்திகள் எல்லாம் வந்துவிட்டன. படத்தில் சில மலேசிய நடிகர்களும் நடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ராக்ஸ்டார் என்றழைக்கப்படும் டார்க்கி. இவர் யோகிபி போல் புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடிகரும் ஆவார். அவரும் இந்தப்படத்தில் நடிக்கிறாராம்.

ரஜினியும் அவரும் படப்பிடிப்புத்தளத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இப்போது சமுகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!