ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துவிட்டாரா அனிருத்?

சென்ற வருடம் வெளியான கத்தி படத்தின் இசை டாப் சார்ட்டில் இடம்பிடித்தது நாமறிந்ததே. மேலும் இப்படம் 100 கோடி க்ளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்ற வருடம் வெளியான மான் கராத்தே, வேலையில்லாப் பட்டதாரி, காக்கிச் சட்டை பாடல்கள் என எஃப்.எம் சேனல்கள், மற்றும் இசை வரிசைகள் என முதல் 10 இடங்களை ஆக்கிரமித்தது நாமறிந்ததே.

இந்த வருடம் வெளியான மாரி, நானும் ரவுடிதான், வேதாளம் ஆகிய படங்களும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. மேலும் வேதாளம் படம் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து 100 கோடி க்ளப்பில் இணைந்த படங்களின் இசை எனில் அது அனிருத் படமே.

அதேசமயம் ஏ.ஆர்.ரஹ்மானும் இனி உலகத் தர இசையமைப்பாளர் என்பதால் அவரை தமிழுக்கு மட்டுமென நாம் சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதால் அவருக்கு அடுத்த இடம் இனி அனிருத்தே என சந்தேகம் இல்லாமல் கூறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!