சாத்தியமாகுமா விக்ரம்-நயன்தாரா ஜோடி? | Nayanthara to pair with Vikram in his next?

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (23/11/2015)

கடைசி தொடர்பு:11:42 (23/11/2015)

சாத்தியமாகுமா விக்ரம்-நயன்தாரா ஜோடி?

 ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. ஆனந்த் ஷங்கர் விக்ரம்பிரபுவின் அரிமா நம்பி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பதாக இருந்து அவர்கள் பின்வாங்கியதை அடுத்து இப்போது ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளார்.

ஷிபு தமீன்ஸ் விஜய்யின் புலி படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மலேசியாவில் துவங்கப்பட உள்ள இப்படத்தின் நாயகியாக காஜல் அகர்வாலிடம் பேசப்பட்டது. தற்போது புதிய செய்தியாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

எனினும் ’நயன்தாரா எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?’...என்ற கேள்வி எழுந்துள்ளது. கள்வனின் காதலி படத்தில் நடித்துக்கொண்டிருந்த நயனை ஏன் இந்தப் படத்துக்கெல்லாம் ஒப்புக்கொள்கிறீர்கள் என தன் படத்துக்கு அழைத்ததாகவும், அதனால்  விக்ரமின் படங்களில் இது நாள் வரை நயன்தாரா ஜோடி சேரவில்லை என்றும் பேச்சு இருக்கிறது. இந் நிலையில் இப்போது இவர்கள் ஜோடி சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் பொருத்திருந்து பார்க்கலாம். படத்தின் இன்னொரு நாயகியாக பிந்துமாதவி ஏற்கெனவே தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்