நானும்ரவுடிதான் படத்தை வாங்க கடும்போட்டி

இப்போதெல்லாம் திரைப்படங்களின் தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையை வாங்க எந்தத்தொலைக்காட்சியும் முன்வருவதில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை படத்தின் செலவில் பெரும்பகுதி அல்லது மொத்தச்செலவையும்கூட தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையிலேயே கிடைத்துவிடும் என்கிற நிலை இருந்தது. அதனால் புற்றீசல் போல் படங்கள் வெளிவரத் தொடங்கின.

தொலைக்காட்சிகளிவ் விளம்பரநேரத்தைக் குறைத்தபிறகு படங்கள் வாங்குவதை எல்லாத் தொலைக்காட்சிகளும் குறைத்துக்கொண்டன அல்லது விட்டுவிட்டன. இரண்டு கோடி மூன்றுகோடி என்று விலை பேசப்பட்ட படங்களின் தற்போதைய விலை என்ன தெரியுமா? இருபது இலட்சம், முப்பது இலட்சம்தான். இதுபோன்ற படங்களை வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் அவசரத்தைப் புரிந்து மேலும் விலையைக் குறைத்து வாங்கி வைத்துக்கொண்டு பின்பு அதிகவிலைக்கு விற்பதும் நடக்கிறதென்கிறார்கள்.

இன்னும் கொஞ்சநாளில் நிலை மாறும் மறுபடி விலை ஏறும் என்று நினைத்துப் படங்களை வாங்கி வைத்துக்கொள்ளும் இடைத்தரகர்களும் இருக்கிறார்களாம். இந்தச் சிக்கல் எல்லாம் சாதாரணப்படங்களுக்குத்தான். ஒரு படம் ஒடிவிட்டால் அதின் நிலை வேறு. அண்மையில் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நானும்ரவுடிதான் படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் மூன்றரைகோடி வரை தரத்தயாராக இருக்கிறதாம் சன்தொலைக்காட்சி.

அதேஅளவில் கொடுத்துப் படத்தை வாங்க விஜய்தொலைக்காட்சியும் போட்டிபோடுகிறதாம். ஆனால் அவர்கள் தருவதாகச் சொல்லும் விலையைவிட அதிகமாக எதிர்பார்க்கிறதாம் தயாரிப்புநிறுவனம். இதனால் அந்த வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறதென்கிறார்கள்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!