வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (24/11/2015)

கடைசி தொடர்பு:16:17 (24/11/2015)

பிரியங்கா சோப்ராவின் சர்ச்சைக்குரிய வீடியோவால் பரபரப்பு!

பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடித்த ஒரு காட்சி இந்தியத் திரையுலகையே சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சித் தொடரான குவண்டிகோ சீரியலில் துப்பறியும் நிபுணராக நடிக்கும் பிரியங்கா சோப்ரா ஆரம்பம் முதலே கொஞ்சம் கவர்ச்சியாகவும் மேலும் முத்தக்காட்சிகளில் நெருக்கமாகவும் நடித்து சற்றே பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடில் பிரியங்கா சோப்ரா நடித்த ரொமான்ஸ் காட்சி ஒன்று இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானதோடு வாட்ஸப் உள்ளிட்ட தளங்களில் இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது. பிரியங்கா சோப்ரா நெருக்கமாக நடித்துள்ள அக்காட்சியில் வரும் முத்தம் சிந்தும் தருணங்களில் பிரியங்காவின் உதடுகளில் கொஞ்சம் ரத்தமும் சிந்த பிரியங்காவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சியிலிருந்தே பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் தனக்கென தனி இடம்பிடிக்கும் முயற்சியில்இருப்பது நன்றாகத் தெரிகிறது எனலாம். ’மேரிகோம்’ படம் மூலம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய பிரியங்கா சோப்ரா தற்போது அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க