வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (25/11/2015)

கடைசி தொடர்பு:12:51 (25/11/2015)

வழக்கம்போல் வேலையைக் காட்டிய கமல்

ஒரு படம் முடிந்து வெளியாகும் போதே அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் தந்துவிடுகிறார் கமல்ஹாசன். இந்த வருடம் மட்டும் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் மற்றும் சீக்கட்டிராஜ்யம் என்று நான்கு படங்களைத் தந்துவிட்டார்.

அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டார் கமல். மலையாள இயக்குநரான டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார். முன்னர் 1989ல் கமல் நடிப்பில் மலையாளத்தில் வெளியான சாணக்யன் படத்தின் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 ஆண்டுகள் பிறகு மீண்டும் இவர்கள் இணையும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடிக்கவிருக்கிறார். குடும்பம் சார்ந்த நகைச்சுவைப் படமாக உருவாகிவரும் இப்படத்திற்கான டைட்டிலும் கசிந்துவருகிறது.

படத்திற்கான வேலைகள் ஆரம்பித்து நடந்துவரும் வேலையில், “ அப்பா அம்மா விளையாட்டு” என்று பெயரிடலாம் என்று சொல்லப்படுகிறது. தெலுங்கில் “அம்மா நானா ஆட்டா” என்ற பெயர் தேர்வு செய்யப்படலாம்.

அமெரிக்காவில் படமாக்கவிருப்பதாகவும், இப்படத்திற்காக கமல் 50 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் 2016 ஆம் ஆண்டுக்கான பயணம் தொடங்கிவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்