ஹாரிஸூக்கு படங்கள் கிடைக்க இதுதான் காரணமா?

இந்தஆண்டு வெளியான என்னைஅறிந்தால், அனேகன், நண்பேன்டா ஆகிய மூன்று படங்களுக்கு ஹாரிஸ்ஜெயராஜ்தான் இசை. அந்தப்படங்களுக்கு அடுத்து, உதயநிதியின் கெத்து படத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டிருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ். அதுவும் முன்பே செய்த ஒப்பந்தம் என்பதால் அவர் வசம் இருந்ததென்று சொல்லப்பட்டது. அதன்பின்னர் வேறு எந்தப்படமும் அவரிடம் இல்லை.

அவருடைய இந்தஆண்டுப்படங்களில் அவர் பாடல்களுக்குச் சிக்கல் இல்லை என்றாலும் படங்கள் பெரிதாகப் போகாதது அவரையும் பாதித்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. மற்றொன்று அவருடைய சம்பளம். அவர் சுமார் மூன்றுகோடி சம்பளம் வாங்குகிறார் என்று சொன்னார்கள். அவ்வளவு சம்பளம் கொடுக்க எல்லோரும் தயாராக இல்லை என்பதால் அவர் பக்கம் யாரும் போகவில்லை என்று சொன்னார்கள்.

ஆனால் மிகஅண்மையில் அவர் மூன்று பெரியபடங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் புதியபடம், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சிங்கம் 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியபடம் ஆகியனவற்றில் அவர் இசையமைப்பதாகச் சொல்லப்படுகிறது.

இம்மூன்று படங்களும் அவருக்குக் கிடைக்க முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறதாம். அவர் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார் என்பதுதான் அந்தக்காரணமாம். படத்தின் வேலைகளைப் பொறுத்து தன்னுடைய சம்பளத்தில் ஐம்பதுஇலட்சித்திலிருந்து ஒருகோடிவரை குறைத்துக்கொள்ள அவர் முன்வந்ததே அவருக்கு வரிசையாகப் படங்கள் கிடைக்கக் காரணம் என்று சொல்கிறார்கள். உண்மைதானா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!