வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (25/11/2015)

கடைசி தொடர்பு:15:52 (25/11/2015)

அமீர்கானால் ஸ்னேப்டீலுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் அமீர்கான் நாட்டில் மத சகிப்புத் தன்மை இல்லையென கூறிய கருத்தால் ஷாப்பிங் இணையதளமான ஸ்னேப்டீலுக்கு பிரச்னையாகியுள்ளது. மேலும் அவர் பிராண்ட் அம்பாசிடராக வரும் சாம்சங், டைடன், டாடா ஸ்கை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்துவிட்டன.

அமீர்கான் நாட்டை விட்டுப் போக வேண்டும் என மனைவி சொல்லியதாக சொன்ன நிலையில் அப்ப்டியெனில் அமீர்கான் விளம்பரப்படுத்தும் பொருட்களை நாங்கள் எப்படி சகித்துக்கொள்ள முடியும் எனக் கேட்க துவங்கியுள்ளன.

இந்நிலையில் இணைய உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் அமீர்கான் கருத்தால் வருத்தமடைந்த ரசிகர்கள் பலரும் ஸ்னேப்டீல் ஆண்ட்ராய்டு போன் அப்ளிகேஷனை நிராகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைகளின் அமீர்கான் குறித்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள் ஸ்னேப்டீலையும் சேர்த்து திட்டி வருகிறார்கள்.

இதனால் ஸ்னேப்டீலுக்கு சிக்கலாகியுள்ளது. மேலும் ஸ்னேப்டீல் தனது ட்விட்டர் பக்கத்தில் அமீர்கான் சொன்ன கருத்துக்கு எந்த விதத்திலும் ஸ்னேப்டீல் பொறுப்பேற்காது. மேலும் இதில் எங்கள் தலையீடும் கிடையாது. ஸ்னேப்டீல் இந்தியாவின் நிறுவனம் என்பதில் பெருமையுடன் தொடர்ந்து பணியாற்றும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்