வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (25/11/2015)

கடைசி தொடர்பு:17:49 (25/11/2015)

படமாகிறது நீல்ஆம்ஸ்ட்ராங் வரலாறு!

படமாக உருவாக உள்ளது நீல் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை வரலாறு. ஜேம்ஸ் ஹன்சென் எழுதிய ஃபர்ஸ்ட் மேன், படமாக எடுக்கப்பட உள்ளது. நீல்ஆம்ஸ்ட்ராங்கின், அப்போல்லோ 11 மிஷன் மற்றும் நிலவில் முதன் முதலில் அவர் வெற்றிகரமாக தரை இறங்கியது, நிலவில் கால் பதித்தது என முழு பையோபிக் படமாக எடுக்கப்பட உள்ளது.

இதில் நீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் இடம்பெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நீல்ஆம்ஸ்ட்ராங் கதாபாத்திரத்தில் ரியான்கோஸ்லிங் நடிக்கவுள்ளார். 2005 இல் வெளிவந்த இப்புத்தகத்தின் திரைப்பட உரிமையை 2003 இல் கிளின்ட் ஈஸ்ட்வூட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் வாங்கியது. டாமின் செஜ்லே இப்படத்தை இயக்குகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க