வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (26/11/2015)

கடைசி தொடர்பு:11:23 (26/11/2015)

”தெறி”...இன்னொரு குஷியா?அல்லது புலியா?

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கும் படம் தெறி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்புகள் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி கொண்டாடினர்.மேலும் புலி படத்திலிருந்து வேதாளம் என டைட்டில் வைத்தபடி, தற்போது அஜித்தின் வேதாளம் படத்தின் ஹிட் வார்த்தையான தெறிக்கவிடலாமாவிலிருந்து தெறி வார்த்தையை எடுத்துள்ளனர் விஜய் படக்குழு.

இந்த தெறி வார்த்தையில் அஜித்தின் வேதாளம் படத்தில் ஹிட் பாடல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் விஜய்யைப் பொறுத்தமட்டில் இரண்டெழுத்துப்படங்கள் பெரிதாக போனதில்லை என்றொரு செண்டிமெண்டைச் சொல்கிறார்கள். 

விஜய் நடிப்பில், குஷி, தேவா, யூத், ஆதி, சுறா, மற்றும் புலி  ஆகிய படங்கள் இரண்டெழுத்துகளில் அமைந்தவை. இவற்றில் குஷி தவிர மற்ற படங்கள் எல்லாம் வசூலைப் பொறுத்தமட்டில் அடிவாங்கிய படங்களே. இந்நிலையில் ”மீண்டும் இரெண்டெழுத்துப் படமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் மூன்று விஜய் என்ற நிலையில், படம் மூன்று முகம் பாணியிலோ அல்லது விஜயகாந்தின் சத்திரியன் பாணியிலோ இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க