வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (26/11/2015)

கடைசி தொடர்பு:11:59 (26/11/2015)

முருகதாஸூக்கும் மகேஷ்பாபுவுக்கும் கருத்துவேறுபாடு?

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மௌனகுரு படத்தின் இந்தி மொழிமாற்றான அகிரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அவர் இயக்கவிருக்கும் அடுத்தபடத்தின் கதாநாயகன் தெலுங்குநடிகர் மகேஷ்பாபு. அவரை வைத்து எடுக்கப்படவிருக்கும் புதியபடத்தின் தொழில்நுட்பக்கலைஞர்களை முடிவுசெய்திருக்கிறார்கள்.

படத்துக்கு சந்தோசிவன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் ஹாரிஸஜெயராஜ் இசையமைக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒளிப்பதிவாளரை முடிவுசெய்வதில் முருகதாஸூக்கும் மகேஷ்பாபுவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கஜினி மற்றும் தற்போது இயக்கிய அகிரா ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஆர்.டி.ராஜசேகரை ஒளிப்பதிவாளராக்கலாம் என்று முருகதாஸ் விரும்பியதாகவும் அதற்கு மாறாக வேறு சில ஒளிப்பதிவாளர்களை மகேஷ்பாபு பரிந்துரைத்ததாகவும் அவர்களில் சந்தோஷ்சிவனும் ஒருவர் என்பதால் அவரைத் தேர்வு செய்ததாகவும் சொல்கிறார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்துக்கும் சந்தோஷ்சிவன் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க