இயக்குநராகிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

ராஜ்தருண், ஹீபாபட்டேல் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் நவம்பர் 20 ஆம் தேதி வெளியான படம் குமாரி21 எப். அந்தப்படத்துக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார், சூர்யாபிரதாப் என்பவர் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு செய்திருந்தவர் ரத்னவேலு.

சேது, நந்தா, வாரணம்ஆயிரம், எந்திரன், லிங்கா உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ரத்னவேலு, சின்னபட்ஜெட்டில் தயாரான இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யக் காரணமே படத்தின் கதைதான் என்று சொல்லப்பட்டது. சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் திரைக்கதை படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறதென்று சொல்கிறார்கள்.

இந்தப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றவுடன், வழக்கம்போல தமிழில் படத்தை எடுக்கத் தயாராகிவிட்டார்களாம். இந்தப்படத்தைத் தமிழில் இயக்கவிருப்பர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுதானாம். பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றிய காரணத்த்தால் அவருக்கும் இயக்குநராகும் எண்ணம் கடந்த சில வருடங்களாகவே இருந்துவந்தது.

இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து படமும் வெற்றி என்பதால் அதைத் தமிழில் தாமே இயக்கிவிடலாம் என்று முடிவுசெய்துவிட்டாராம். தமிழில் நடிக்க நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!