விஜய் சொன்ன அந்த ஒரு கண்டீஷன்?...ரகசியத்தை உடைத்த அட்லீ! | Vijay wants Theri movie will be for family audience, Atlee revealed

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (28/11/2015)

கடைசி தொடர்பு:13:23 (28/11/2015)

விஜய் சொன்ன அந்த ஒரு கண்டீஷன்?...ரகசியத்தை உடைத்த அட்லீ!

அட்லீ இயக்கத்தில் விஜய், எமி ஜாக்சன், சமந்தா நடிக்கும் புதிய படம் ‘தெறி’. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். இந்தப் படம் போலீஸ் கதை என்பது யாவரும் அறிந்ததே. முதல் படமான ‘ராஜா ராணி’ வெற்றியைத் தொடர்ந்து, அட்லீக்கு அடுத்த படமே பெரிய ஹீரோ படம் அமைந்து சினிமா உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்ற ரகசியத்தைக் கூறியுள்ளார் அட்லீ, எனக்கு நண்பன் படத்திலிருந்தே விஜய்யுடன் நல்ல பழக்கம். மேலும் நான் அந்தப் படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். அப்போதே அவர் என்னிடம்  நல்ல கதை இருந்தால் சொல் பண்ணலாம் என்றார். நான் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு வேலை செய்தேன்.

முழுமையான கதையுடன் விஜய்யை சந்திக்க விரும்பினேன். ராஜா ராணி படத்தின் போதே நான் இரண்டு முறை விஜய்யை சந்தித்து கதை குறித்துப் பேசினேன். அவருக்குப் பிடித்துவிட்டது. மேலும் அடுத்தமுறை அவரை சந்திக்கும் போது முழுமையான ஸ்க்ரிப்டுடன் சந்தித்தேன்.

இந்தப் படம் ஓர் இரவில் முடிவாகவில்லை. பல நாட்கள் கலந்துரையாடிய பிறகே கிடைத்த படம். விஜய் ஒரே ஒரு கண்டீஷன் மட்டும் போட்டார். படம் குடும்பப் படமாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

நானும் மாஸ் விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டதோடு குடும்பங்களுக்கான படமாகவும் உருவாக்கி வருகிறேன். படத்தில் பஞ்ச் டயலாக், மாஸ் சீன்கள் எல்லாம் இருக்கும் அனைத்தும் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் எனக் கூறியுள்ளார் அட்லீ.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்