Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமல் நடிக்கவேண்டிய கதையில் விக்ரம்பிரபு?

விக்ரம்பிரபு இப்போது ஜி,என்,அர்,குமரவேலன் இயக்கத்தில் வாகா மற்றும் கணேஷ்விநாயக் இயக்கத்தில் வீரசிவாஜி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில், வாகா படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாம். வீரசிவாஜி படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

விக்ரம்பிரபு நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றனர். அவர் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சுந்தரபாண்டியன், இதுகதிர்வேலன்காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப்படத்துக்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறாராம். இன்றைக்கு இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விமல் நடிப்பதாக ஒரு அறிவிப்பு வந்திருந்தது. அந்தப்படம் அறிவிப்போடு நின்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது.

இப்போது விக்ரம்பிரபுவை இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது விமல் நடிக்கவேண்டிய கதையா என்ற கேள்வி வந்திருக்கிறது. இதற்கு இயக்குநர்தான் பதில் சொல்லவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!