மீண்டும் மாயா போல் ஒருபடம்- நயன்தாரா ஒப்புதல்

தனிஒருவன், மாயா, நானும்ரவுடிதான் என்று வரிசையாக வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணியில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்து சிம்புவுடன் அவர் நடித்திருக்கும் இதுநம்மஆளு, ஜீவாவுடன் நடித்திருக்கும் திருநாள் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து தமிழில், அரிமாநம்பி இயக்குநர் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ஒருபடம் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தவிர நிறையப் படங்களில் அவரை நடிக்கக்கேட்டு அணுகுகிறார்களாம். ஆனால் அவர் மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கிறாராம்.

அவரை மையப்படுத்திய கதைகளும் அதிகமாக அவரைத் தேடிவருகின்றனவாம். அவற்றில், இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் முருகதாஸ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாயா போல் கதாநாயகியை மையப்படுத்திய அந்தப்படத்தை சற்குணமே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!