தமிழகத்துக்கு தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி: அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் வழங்கினார்!

சென்னை: தமிழக முதலமைச்சரின் வெள்ளச் சேத நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் ரூ.35 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் மழைவெள்ளம் புகுந்து மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரையுலகினர், முதலமைச்சரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

தற்போது தெலுங்கு நடிகர்களும், முதலமைச்சரின் வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.10 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!