கண்ட்ரோல் ரூமில் விஷால் - விறுவிறுப்பாய் உதவிகள்- நீங்களும் உதவலாம்

சென்னையில் ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் பல உதவிகள் செய்துவருகிறார் விஷால். அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும், மக்களுக்கு சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளார்.

விஷால் பேசியதாவது, “ கடலூர், வடசென்னை, தாம்பரம் மற்றும் முடிச்சூர் இந்த இடங்கள் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களுக்குத்தான் அதிகப்படியான உதவிகளும், நிவாரணப் பொருட்களும் தேவைப்படுகிறது. நாங்கள் அதிகப்படியாக வட சென்னை மக்கள் இருக்கும் பகுதியில் உதவிசெய்துவருகிறோம். அதற்கான உணவுப்பொருட்கள் என அனைத்தும் சென்றுகொண்டிருக்கிறது.

 பொதுமக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், சாப்பாடு எல்லா பகுதிகளுக்கும் செல்கிறது. எனவே, பால்பவுடர், குடிநீர், சானிடரி நாப்கின், போர்வைகள் தேவைப்படுகின்றன. நடிகர்கள் மட்டும் தான் உதவணும் என்றில்லை. ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்க.

“லேடி ஆண்டாள் பள்ளி, சேத்துபட்டு” தான் எங்களுடைய கண்ட்ரோல் ரூமாக செயல்படுகிறது. இங்கே தான் எல்லாப் பொருட்களும் வந்து ஒவ்வொரு இடத்திற்கும் பிரித்து அனுப்புகிறோம். நீங்கள் அனுப்பும் பொருட்களை இப்பள்ளிக்கே அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு கூறியுள்ளார் விஷால்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!