கடவுள் துணை இருக்கவேண்டும் -வெள்ளத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

மழைவெள்ளத்தால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து நிற்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கோடம்பாக்கம் வீடு மற்றும் ஸ்டூடியோவிலும் நீர் புகுந்துவிட்டது.

இதுகுறித்து அவர் சமுகவலைதளத்தில் தெரிவித்துள்ளார், “ நண்பர்களும், நலம் விரும்பிகளும் கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது. நம்மில் பலர் தற்காலிக அகதிகள் ஆகியிருப்பது வேதனையளிக்கிறது. 

என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ டீம் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஸ்டுடியோ மற்றும் வீட்டுக்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலம் வெளியேற்றுகிறார்கள். முழுவதுமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

சென்னையை மீண்டும் சரியான வகையில் புதுப்பித்து, எதிர்கால இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம் என நம்புகிறேன். கடவுள் நமக்கு எல்லா வகையிலும் இதனை எளிதாக செய்து முடிக்க உறுதுணையாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!