திருமணச் செலவை வெள்ளநிவாரணநிதிக்குத் தருவோம்- புதுமணப்பெண் சந்தியா பேட்டி

“காதல்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்தியா. தொடர்ந்து டிஸ்யூம், வல்லவன், கூடல்நகர் என்று 40க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர்.

காதல் சந்தியாவின் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து மிக எளிமையான முறையில் நேற்று நடந்துமுடிந்தது. இதுபற்றி சந்தியாவிடம் கேட்டபோது,

" சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் பருவநிலை காரணமாகத்தான் கல்யாணத்தை எளிமையாக கேரளாவிலேயே முடித்துவிட்டோம். வரவேற்பு நிகழ்ச்சி கூட சென்னையில் நடத்தப்போவதில்லை. மேலும் பிரம்மாண்டமாக சென்னையில் கல்யாணத்தை மேற்கொண்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் அந்தச் செலவை, சென்னை மழை நிவாரண நிதிக்காக கொடுக்கவிருப்பதாக என் பெற்றோர் முடிவெடுத்திருக்கிறார்கள்” என்று சுருக்கமாகச் சொல்லிமுடித்தார் சந்தியா.

சந்தியா திருமணம் முடித்திருக்கும் வெங்கட் சந்திரசேகரன் என்பவர் சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர். சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “காதல்” படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தார் சந்தியா. அறிமுகமான முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் என்பதும் கூடுதல் செய்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!