Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையை மீட்போம் - மதராசபட்டினம் நாயகி எமியின் நன்றிக்கடன்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தெறி. இப்படத்திற்கான  படப்பிடிப்பு கோவாவில் நடந்துவருகிறது.

இப்படத்தின் நாயகியான எமிஜாக்ஸன் தெறி படம் பற்றியும், சென்னை மக்களுக்கு தெறி குழுவினரின் அடுத்தகட்ட உதவி பற்றியும் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “ தெறி படத்திற்காக  ஒட்டுமொத்தக் குழுவும் கோவாவில் இருக்கிறோம். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியவிருக்கிறது. விரைவில் சென்னை திரும்புவோம்.

எங்களால் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவமுடியவில்லை, எனவே அடுத்தகட்டமாக சென்னையை மறுகட்டமைக்கவேண்டும். அதற்கான நிதியை நாங்கள் தருவோம். மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சென்னையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நடுவே வெள்ள நிவாரண நிதிக்காக  விஜய் ஐந்து கோடி தந்திருப்பதாக செய்திகள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கோவா படப்பிடிப்பிலிருந்து விரைவில் திரும்பியிருக்கும் தெறி படக்குழுவினர் சென்னை மக்களுக்காக உதவிசெய்யத் தயாராக வருகிறார்கள் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close