பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மணிரத்னம் - சுஹாசினி தம்பதி

தொடர் கன மழையால் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று பல உதவிகளைச் செய்து வருகிறார்கள். விஷால், சித்தார்த், பார்த்திபன், மோகன், இளையராஜா, தனுஷ் , ராணா, காஜல் அகர்வால் என பலரும் இதில் அடக்கம்.

இதற்கிடையில் பிரபல இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசினியும் இணைந்து உதவிகள் பலவற்றை செய்து வருகிறார்கள். ஒரு வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள், பெண்களுக்கான சானிட்டரி நேப்கின்கள், என பல உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

10 கிலோ அரிசி, 3 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய், புளி, உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, 10 கிலோ வெங்காயம், உருளைக் கிழங்கு என ஒரு செட்டாக மக்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். இயக்குநர் மணிரத்னம் கடையில் சென்று பெண்களுக்கான நேப்கின்கள் வாங்கும் புகைப்படமும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

 

சுஹாசினியே ”மாஸ்டர் குழந்தைகளுக்கான மருந்துகள், பால் பவுடர், டெட்டால், என இப்படி வாங்குவதை நானே பார்த்ததில்லை” என வியந்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!