வெள்ள நிவாரணநிதிக்கு பத்துஇலட்சம் கொடுத்த பிரமாண்ட இயக்குநர்

வெள்ள நிவாரண நிதிக்காக பல்வேறு நடிக, நடிகையர்கள் தங்களால் இயன்ற தொகையினை கொடுத்து வருகிறார்கள். 

நடிகை ஹன்சிகா 15 இலட்சம் கொடுத்தார்,  ஸ்ரீதிவ்யா 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இன்னும் பலரும் நிவாரணத்தொகைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தெலுங்குநடிகர்கள் தனித் தனியாகக் கொடுத்தது போக வசூலும் செய்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் அதுவும் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் ஷங்கரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

அவர் இவ்வளவு கொடுத்தார், இவர் இவ்வளவு கொடுத்தார் என்று  உறுதிப்படுத்தப் படாத பல செய்திகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஷங்கர் பத்துஇலட்சம் கொடுத்ததை ஊடகங்களுக்குச் செய்தியாகக் கொடுத்திருக்கிறார்.      
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!