வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (14/12/2015)

கடைசி தொடர்பு:10:57 (14/12/2015)

முதலமைச்சர்களுக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த்!

கடந்த டிசம்பர் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தார். எனவே பெரிதாக ரசிகர்களும் ரஜினியின் வேண்டுகோளை ஏற்று பிரம்மாண்ட விழாக்களை தவிர்த்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் தனக்கு வாழ்த்துச் சொன்ன அமிதாப் பச்சன், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதுதவிர்த்து சென்னைக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் என் ரசிகர்களுக்கு நன்றி. மேலும் இதைத் தாண்டி வேறு எதுவும் என்னை பெருமைப்படவோ, மகிழ்ச்சியடையவோ செய்யாது எனக் கூறியுள்ளார். அதே போல் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகளை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்