எந்திரன்2 படத்தில் அர்னால்டு இல்லை?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் எந்திரன்2 படத்தின் வேலைகள் வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டன. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில் கடைசிநேரத்தில் பெரியமாற்றம் நடந்திருக்கிறதாம்.

படத்துக்கு மிகப்பெரிய கவனத்தைக் கொடுக்கவிருந்த அர்னால்டு படத்தில் நடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அர்னால்டுக்கு சுமார் நூறுகோடிவரை சம்பளம் தருவதாகப் பேசிமுடிக்கப்பட்டுவிட்டது அவர் படத்தில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஏன் இந்த மாற்றம் நடந்தது? என்று கேட்டால், அர்னால்டு சம்பளம் விசயத்தில் அவர் சொன்னவற்றை அப்படியே படக்குழு ஏற்றுக்கொண்டதாம்.

அதன்பின் அவருடைய ஒப்பனையாளர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்குத் தனியாகச் சம்பளம் மற்றும் அவர்கள் தங்குமிடம் மற்றும் உணவுவசதிகள் ஆகியனவற்றிற்கு ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவே பலகோடி வந்துவிட்டதாம், அதைப் பார்த்த படக்குழு அதிர்ச்சியடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதைக் குறைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே படத்தில் அர்னால்டு இருக்கமாட்டார் என்றும் அதற்குப் பதிலாக வேறொரு நடிகரைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!