வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (16/12/2015)

கடைசி தொடர்பு:12:37 (16/12/2015)

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் விக்ரம்!

இயக்குநர் திரு இயக்கத்தில் விக்ரம் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்த் சங்கர் படம் மற்றும் திரு இயக்கும் படம் ஆகிய இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விஷாலுடன் சமர், தீராதவிளையாட்டுப்பிள்ளை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரு. இவரின் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஏற்கெனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆனந்த்ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து திரு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்   என்றும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்