ஆர்யாவின் அடுத்த படம் எது?

ஆர்யா நடித்து இந்தவருடத்தில் புறம்போக்குஎன்கிறபொதுவுடைமை, வாசுவும்சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க, யட்சன், இஞ்சிஇடுப்பழகி ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றைத் தொடர்ந்து மலையாளப்படமான பெங்களூர்டேஸ் படத்தின் தமிழாக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதென்கிறார்கள். எனவே இப்போதைக்கு அவர் படப்பிடிப்பு எதுவுமில்லாமல் ஓய்வாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்து பாலா இயக்கும் படத்தில் ஐந்துநாயகர்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறார். அந்தப்படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்பாக சூப்பர்குட்பிலிம்ஸ் தயாரிப்பில் ஒருபடத்தில் நடிக்கவிருக்கிறார் ஆர்யா.

அந்தப்படத்தை விமல், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநர் சொன்ன கதை மற்றும் கதாநாயகன் ஆகியவை தவிர கதாநாயகி, தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகிய எதுவும் முடிவாகவில்லையாம். இதனால் இதுபற்றி எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!