இளையராஜாவுக்குப் பாராட்டுவிழா நடக்குமா?

   பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் தாரைதப்பட்டை படம் பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இளையராஜா இசையமைக்கும் ஆயிரமாவதுபடம். அதனால் அவரைச் சிறப்பிக்கும் விதமாக மிகப்பெரிய விழாவொன்றை நடத்தி அதில் படத்தின் பாடல்களையும் வெனியிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.

டிசம்பர் முதல்வாரத்தில் சென்னையில் மழைவெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்படி ஒரு விழா வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவுசெய்துவிட்டார்களாம். இளையராஜாவுடைய அயிரமாவது படம் வெளிவருவதற்கு முன்பாக இந்த விழாவை நடத்தினால்தான் சரியாக இருக்கும் என்கிற நிலையிலும் மக்கள் பாதிப்படைந்திருக்கும் இந்தநேரத்தில் இந்தக்கொண்டாட்டம் வேண்டாம் என்று இயக்குநர் பாலா சொல்லிவிட்டாராம்.

இளையராஜாவுக்கும் அதே மனநிலைதான் என்பதால் விழா இல்லாமல் பாடல்களை வெளியிட்டுவிடலாம் என்று முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே பெரியஅளவில் இல்லாமல் சின்னஅளவிலாவது பாடல்வெளியீட்டுவிழா நடத்தலாம் என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் அதுவும் இருக்காது என்று உறுதியாகப் படக்குழு¬வைச் சேர்ந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!