விஜய்சேதுபதியின் அதிரடி நிபந்தனை

விஜய்சேதுபதி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் வசந்தகுமாரன். அந்தப்படத்தில் தயாரிப்பாளர் சுரேஷூக்கும் விஜய்சேதுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் படம் நின்றுபோனது. அதன்பின் இருவரும், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறிக் குற்றம் சாட்டினர்.

பல மாதங்கள் கழித்து இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டு தொடங்கப்பட்டிருக்கும் படம்தான் தர்மதுரை. சீனுராமசாமி இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடந்துகொண்டிருக்கிறது.

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் விஜயசேதுபதி, இந்தப்படத்துக்காக அறுபதுநாட்கள் தேதி தருகிறேன் அதற்குள் படத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.

அவருக்கு வரிசையாகப் படங்கள் இருப்பதும் அதற்கு முக்கியமான காரணம் என்று சொல்கிறார்கள். இதனால் ஒரேகட்டமாக இந்தப்படத்தை முடித்துவிடவேண்டும் என்று வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறாராம் இயக்குநர் சீனுராமசாமி.

திட்டமிட்டபடி நடந்துவிட்டால் இவர்களுடைய முந்தையபடமான இடம்பொருள்ஏவலுக்கு முன்னால் இந்தப்படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரேகட்டமாகப் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பதால் தயாரிப்புநிறுவனம் கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!