இப்படி நடந்திருந்தால் நிர்பயாக்கள் தப்பியிருப்பர்- வைரலாகும் வீடியோ!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்ட நிர்பயா என்று சொல்லப்பட்ட ஜோதிசிங், சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பந்தப்பட்ட 6 பேரில் ஒருவருக்கு வயது அப்போது 17 என்பதால் குறைவான தண்டனையுடன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார்.

மூன்று வருட தண்டனைக்குப்பிறகு நேற்று அவர் விடுதலையாகியிருக்கும் இந்தநேரத்தில், நிர்பயாவைப் போல பல பெண்களுக்கும் இவ்வாறான அநீதிகள் நிகழ்ந்துவருகிறது என்பதைச் சொல்லும் குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. 

அந்தவீடியோவில், “ அலுவலகம் முடிந்து இரவில் வீடு திரும்புவதற்காக கேப் புக் செய்கிறார் ஒரு பெண். வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போதே அசதியில் தூங்கிவிடுகிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரை பலாத்காரம் செய்யமுற்படுகிறார் அந்த டிரைவர். அந்த சமயத்தில் ரேடியோ ஒலிக்கிறது. அதில் ஆர்.ஜே.” எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள், பலாத்காரம் மட்டும் செய்யாதீர்கள். பலாத்காரத்திற்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் இறுதி செய்துவிட்டது. அந்த தண்டனைச் சட்டம் இன்றே அமலுக்கும் வந்துவிட்டது” என்று சொல்கிறார், இதைக்கேட்ட டிரைவர் மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் வாகனத்தை ஓட்டுகிறார்.

பலாத்காரம் செய்யப்பட்டதால் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் பெண்களைப் பற்றியான கருத்துகளும் இவ்வீடியோவில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அது இன்னும் அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதுபோன்ற அநீதிகள் விரைவில் இந்தியாவை விட்டு அகலவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும்.

வீடியோவிற்கு:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!