’பீப்’ பாடல்- உருவாக்கியவர் குற்றவாளியா? வெளியிட்டவர் குற்றவாளியா? சர்வே முடிவு!

பீப் பாடல் சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. தினம் தினம் புது புதுப் புகார்களும், கண்டனங்களும் உருவாகிக்கொண்டே உள்ளன.

இந்நிலையில் சிம்பு இதில் தனது தவறு எதும் இல்லை. நான் என் சொந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கிய பாடல் இது. யாரோ ஒருவர் திருட்டுத்தனமாக எடுத்து வெளியிட்டுவிட்டார்கள் என சிம்பு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இதையே கேள்வியாகக் கேட்டு வாக்கெடுப்பு நடத்தியது நமது சினிமா விகடன்.

பாடலை வெளியிட்டவர் குற்றவாளியா, அல்லது உருவாக்கியவர் குற்றவாளியா என்ற கேள்விக்கு,உருவாக்கியவரே குற்றவாளி என 56 சதவீத ஓட்டுகளும், வெளியிட்டவர் குற்றவாளி என 44 சதவீதமும் வாக்குகள் விழுந்துள்ளன.

உண்மையும் அதுவே. கொஞ்சம் யோசித்தால் அங்கே படைப்பு என்ற ஒன்று இருக்கவே அதை திருட்டுத்தனமாக வெளியிடும் நிலை உண்டானது. அதே சமயம் தன் சொந்த விஷயங்களை ரகசியம் காத்திருக்க வேண்டியது அந்த பொருளுக்கு சொந்தக்காரரின் கடமையும் கூட. யார் வேண்டுமானாலும் எடுக்கும்படி ஒரு படைப்பை உருவாக்கிவிட்டு, வெளியிட்டது தவறெனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!