வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (26/12/2015)

கடைசி தொடர்பு:14:35 (26/12/2015)

ரஜினியுடன் கிறிஸ்துமஸ் - சந்தோச எமிஜாக்சன்

2010 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசபட்டணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான எமிஜாக்சனுக்கு 2015 தான் முக்கியமான ஆண்டாக அமைந்ததெனலாம்.

இந்த ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ஐ, தனுஷூடன் தங்கமகன் ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் சிங்ஈஸ்பிளிங் இந்திப்படத்திலும் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினியுடன் எந்திரன் 2.0 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். உதயநிதி ஜோடியாக அவர் நடித்திருக்கும் கெத்து படமும் இவ்வாண்டே வெளியாகவேண்டியது. சென்னை வெள்ளம் காரணமாக தள்ளிப்போய் அடுத்தஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகவிருக்கிறது. நேற்று கிறிஸ்துமஸ் நாளும் அவருக்கு விசேசமாக அமைந்துவிட்டது.

காலையிலிருந்து ரஜினியுடன் எந்திரன் 2.0 படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்புத்தளத்தில் கேக்வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார்கள். மாலையில் உதயநிதியின் கெத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு படங்களில் நடித்திருப்பதன் மூலம் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம்கிடைக்கும் என்கிற சந்தோசத்தில் இருக்கிறாராம்.    
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்